Pongal Festival - Curry Virundhu
பொங்கல் கொண்டாட்டம் கறி விருந்து
500 ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.
சென்னை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் மற்றும் இருளர் சமுதாய குழந்தைகளுடன் வருடம் தோறும் பொங்கல் கறி விருந்து அன்பின் பாதை மற்றும் KEH குழுமம் திரு வசந்தகுமார் வாசுதேவன் அவர்கள் மூலம் நடைபெற்றது வருகிறது இதில் சுமார் 500-க்கு மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஏழை சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு அனைத்து வகையான அசைவ உணவுகள் பிரியாணி வகைகள, சிக்கன், மட்டன், மீன், மூட்டை, இறால் போன்ற அனைத்து வகையான உணவுகளையும் சிறுவர்கள் உண்டு மகிழ இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
மேலும் அவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு குழந்தைகளையும் சிறுவர்களையும் மகிழ்விக்க நடத்தப்படுகிறது
காலை, மதியம், இரவு என அனைத்து ஒருநாள் முழுவதும் உணவு வழங்கப்படும்.